2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

வொஷிங்டன் பகிரங்கப் பட்டத்தை நிஷிகோரி கைப்பற்றினார்

Gopikrishna Kanagalingam   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணத்தை கைப்பற்றுபவர்களில் இரண்டாவது அதிக வாய்ப்புள்ளவராக கருதப்பட்ட ஜப்பானின் 25 வயதான கெய் நிஷிகோரி 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜோன் இஸ்னரை தோற்கடித்து சிட்டி பகிரங்க பட்டத்தை கைப்பற்றியுள்ளார். 

இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் ஐந்தாம் இடத்திலிருந்து நான்காம் இடத்துக்கு நிஷிகோரி முன்னேறியுள்ளார்.
தனக்கு இது நல்ல வருடமாக அமைந்ததாகவும், இதே போல அமெரிக்க பகிரங்க தொடரிலும் தொடர எதிர்பார்ப்பதாவும்
நிஷிகோரி தெரிவித்துள்ளார். 

கடந்த வருட அமெரிக்க பகிரங்க தொடரின் இறுதிப்போட்டியில் மரின் சிலிக்கிடம், நிஷிகோரி தோல்வியை தளுவியிருந்தார்.
தனது இறுதி 12 நாட்களில் 10 போட்டிகளில் விளையாடிய இஸ்னர், 12 ஏஸ் சேர்விஸ்களை வீசியிருந்தபோதும், இரண்டு மணிநேரமாக நடந்த போட்டியில் நிஷிகோரி 13 கட்டாய தவறுகளையே விட்டிருந்த நிலையில் இஸ்னர் தோல்வி கண்டுள்ளார். 

கடந்த ஆறு வருடங்களில் மூன்று தடவை சிட்டி பகிரங்க போட்டியின் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .