2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலிய குழாம் அறிவிப்பு

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த உலகக் கிண்ணத்தோடு மைக்கல் கிளார்க் ஓய்வுபெற்றுள்ள நிலையில், அவுஸ்திரேலிய அணியின் தலைவராக ஸ்டீவன் ஸ்மித் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, டெஸ்ட், ஒ.நா.ச போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளென, மூன்று வகையான போட்டிகளின் தலைவராகவும் ஸ்மித் செயற்படவுள்ளார்.

மதுபோதையில் வாகனமோட்டியதன் காரணமாக நான்கு போட்டித் தடை விதிக்கப்பட்ட ஜேம்ஸ் ஃபோக்னருக்கு இடம் கிடைக்காததோடு, ஜொஷ் ஹேஸல்வூட், மிற்சல் ஜோன்சன் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

இக்குழாமில், இடதுகைச் சுழற்பந்து வீச்சாளர் அஸ்டன் ஏகர் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள போதிலும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளெவற்றிலும் பங்குபற்றியிருக்கவில்லை.

குழாம்: ஸ்டீவன் ஸ்மித், அஸ்டன் ஏகர், ஜோர்ஜ் பெய்லி, ஜோ பேர்ண்ஸ், நேதன் கோர்ட்டர்-நீர், பற் கமின்ஸ், கிளென் மக்ஸ்வெல், மிற்சல் மார்ஷ், ஜேம்ஸ் பற்றின்சன், மிற்சல் ஸ்டார்க், மார்க் ஸ்டோய்னிஸ், மத்தியூ வேட், ஷேன் வொற்சன், டேவிட் வோணர்.
இதேவேளை, இடம்பெறவுள்ள ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில், புறச்சுழற் பந்துவீச்சாளர் கம்ரன் போய்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .