Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை-இந்திய அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட்டில் மூன்றாம்நாள் ஆட்டமுடிவில் தமது இரண்டாவது இன்னிங்சில் ஆடி வரும் இந்திய அணி 23 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.
இந்திய அணி வெற்றிபெறுவதற்கு 176 ஓட்டங்களை பெறவேண்டியுள்ளநிலையில், இலங்கையணி வெற்றி பெறுவதற்கு 9 விக்கெட்களை பெற வேண்டியுள்ளது.
களத்தில் தற்போது ஷிகர் தவான் 13 ஓட்டங்களுடனும், இரவுநேர காப்பாளனாக களமிறங்கிய இஷாந்த் ஷர்மா 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். வீழ்த்தப்பட்ட லோகேஷ் ராகுலின் விக்கெட்டினை ரங்கன ஹேரத் கைப்பற்றினார்.
முன்னதாக நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தமது இரண்டாவது இன்னிங்சில் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை பறிகொடுத்திருந்த இலங்கையணி சகல விக்கெட்களையும் இழந்து 367 ஓட்டங்களை பெற்றிருந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கையணி சார்பாக தினேஷ் சந்திமால் டெஸ்ட் போட்டிகளில் தனது நான்காவது சதத்தை 100 பந்துகளில் பூர்த்தி செய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 162 ஓட்டங்களை பெற்று தனது டெஸ்ட் இன்னிங்ஸொன்றில் அதிக ஓட்டங்களை பதிவுசெய்து கொண்டதுடன், ஜெகான் முபாரக் 49 ஓட்டங்களையும், லகிரு திரிமானே 44 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார 40 ஓட்டங்களையும், அஞ்செலோ மத்தியுஸ் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக இரவிச்சந்திரன் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 3 விக்கெட்களையும், இஷாந்த் ஷர்மா, ஹர்பஜன் சிங், வருண் ஆரோன் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தனர்.
இந்தப்போட்டியில் 8 பிடியெடுப்புடுக்களை எடுத்து அஜிங்கயா ரகானே டெஸ்ட் போட்டியொன்றில் அதிக பிடியெடுப்புக்களை எடுத்தவர் என்ற சாதனையை கையகப்படுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025