Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2011 நவம்பர் 15 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வின் 22 வருடங்களை இன்று செவ்வாய்க்கிழமை பூர்த்தி செய்துள்ளார்.
டெண்டுல்கரின் 100 சதத்திற்காக இந்தியா முழுதும் காத்துக்கொண்டிருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் 22 வருடங்களை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதொரு மைல் கல்லாக உள்ளது.
1989 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி 16 வயது மாணவனான டெண்டுல்கர், கராச்சயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இம்ரான் கான், வஸீம் அக்ரம் போன்றோரின் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடினார். பாகிஸ்தானின் வக்கார் யூனிஸும் அதே போட்டியில் அறிமுகமானமை குறிப்பிடத்தக்கது.
முதல் இன்னிங்ஸில் அவர் 15 ஓட்டங்களை மாத்திரமே பெற்றபோதிலும் வஸிம் அக்ரம் போன்றோரின் ஆக்ரோஷ பந்துவீச்சை எதிர்கொண்ட விதம் இம்ரான் கான், ஜாவிட் மியன்டாட் உட்பட பலரின் கவனத்தை ஈர்த்தது.
தற்போது 38 வயதான டெண்டுல்கர் மேற்கிந்திய அணியுடன் தனது 182 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். 453 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் சர்வதே போட்டிகளில் இரட்டைச் சதம் குவித்த முதல் வீரர் என்பது உட்பட ஏறழத்தாழ அனைத்து துடுப்பாட்ட சாதனைகளையும் டெண்டுல்கர் தன்னகத்தே கொண்டுள்ளார்.
அதிக காலம் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் டெண்டுல்கர் 9ஆவது இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த சகலதுறை வீரர் வில்பிரெட் ஸ்மித் ரோட்ஸ் 1899 ஜூன் 1 முதல் 12.04.1930 வரை 30 வருடங்களும் 315 நாட்களும் டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago