2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

3 ஆவது டெஸ்ட் : இலங்கை அணி 4 விக்கெட்டுகளுக்கு 81 ஓட்டங்கள்

Super User   / 2011 ஜூன் 17 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரிலுள்ள ரோஸ் போல் மைதானத்தின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக 38 ஓவர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கிடையில் இலங்கை வீரர்கள் நால்வரை சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்வதில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் வெற்றி கண்டனர்.

இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் 3 ஆவது போட்டி இதுவாகும்.

நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லாஹிரு திரிமான்ன 10 ஓட்டங்களுடனும் தரங்க பரணவிதான 11 ஓட்டங்களடனும் ஆட்டமிழந்தனர். அணித்தலைவர் சங்கக்கார  2 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் வெளியேறினார். மஹேல ஜயவர்தன 4 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். இந்நால்வரும் ஆட்டமிழந்தபோது இலங்கை அணி 39 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

அதன்பின் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய திலான் சமரவீர நேற்று மாலைவரை ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் பிரசன்ன ஜயவர்தன ஆட்டமிழக்காமல் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

நேற்றைய ஆட்டமுடிவின்போது இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் ஜேம்ஸ் அண்டர்சன் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கிறிஸ் ட்ரெம்லெட் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .