2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

3 ஆவது டெஸ்ட்: இலங்கை அணி 9 விக்கெட்டுகளுக்கு 177 ஓட்டங்கள்

Super User   / 2011 ஜூன் 17 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை -இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளான இன்றைய ஆட்டமுடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

சௌதாம்ப்டன் ரோஸ் போல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின் முதல்நாளில் மழை காரணமாக 38 ஓவர்கள் மாத்திரமே விளையாடப்பட்டன. அன்றைய ஆட்டமுடிவில் இலங்கை அணி 4  விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் இரண்டாவது நாளான இன்று 23 ஓவர்கள் மாத்திரமே விளையாடப்பட்டன. இன்றும் இலங்கை அணி விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன.  பிரசன்ன ஜயவர்தன 43 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆட்டமுடிவின்போது தில்ஹார பெர்னாண்டோ 33 ஓட்டங்களுடனும் வெலகெதர ஓட்டமெதுவும்பெறாமலும் களத்திலிருந்தனர்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் கிறிஸ் ட்ரெம்லெட் 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .