2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

இலங்கை அணியை முதல் 3 அணிகளில் ஒன்றாக்குவேன்: மத்தியூஸ்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 15 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக் கிரிக்கெட் அணியைத் தரப்படுத்தலில் முதல் 3 அணிகளுள் ஒன்றாக மாற்றுவதே தனது முக்கிய இலக்கு என இலங்கை அணியின் புதிய தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார். டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் தொடர்பாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

டுவென்டி டுவென்டி சர்வதேசப் போட்டிகளின் தரப்படுத்தலில் இலங்கை அணி முதலிடத்தில் காணப்படுகின்ற போதிலும், டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் 6ஆவது இடத்திலும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 5ஆவது இடத்திலும் இலங்கை அணி தரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், அடுத்த சில வருடங்களில் இலங்கை அணியை முதல் 3 அணிகளுள் ஒன்றாக மாற்றுவதே தனது முக்கியமான இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றத்துக்கு நேரம் தேவைப்படுமெனத் தெரிவித்த அஞ்சலோ மத்தியூஸ், இந்த மாற்றம் கடினமானது எனவும் தெரிவித்தார். எனினும் தானும், டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் உப தலைவரான டினேஷ் சந்திமாலும், தேர்வாளர்களும் இணைந்து கடினமாக உழைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் டுவென்டி டுவென்டி சர்வதேச அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள டினேஷ் சந்திமால், தனக்கு இவ்வளவு விரைவாக இலங்கை அணியின் தலைமைப் பதவி கிடைக்கப்பெறும் எனத் தான் எண்ணியிருக்கவில்லை எனவும், சிறப்பாகச் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--