2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

36 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மேல் மாகாணம் சம்பியன்

Super User   / 2010 நவம்பர் 01 , பி.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

இலங்கையின் 36 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மேல்மாகாணம் சம்பியனாகியது. இவ்விளையாட்டு விழா நேற்றிரவு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ் தலைமையில் நிறைவு பெற்றது..

இப் போட்டிகள் முடிவில் 75 தங்கப்பதக்கங்கள் 54 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 50 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று மேல் மாகாணம் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டது.

இரண்டாவது இடத்தினை 42 தங்கப் பதக்கங்களையும் 33 வெள்ளி பதக்கங்களையும் 44 வெண்கலப்  பதக்கங்களையும் பெற்ற மத்திய மாகாணம் பெற்றுக் கொண்டது.

39 தங்கப் பதக்கங்களையும் 27 வெள்ளி பதக்கங்களையும் 29 வெண்கலப் பதக்கங்களையும் பெற்ற வட மேல் மாகாணம் மூன்றாம் இடத்தினை பெற்றுக் கொண்டது.

இவ்விளையாட்டு விழாவில் ஏனைய மாகாணங்கள் வென்ற பதக்கங்கள் விபரம் பின்வருமாறு:-

தென் மாகாணம் :23 தங்கப் பதக்கங்கள், 29 வெள்ளி பதக்கங்கள், 13 வெண்கலப் பதக்கங்கள்

சப்ரகமுவ மாகாணம்:  21 தங்கப்பதக்கங்கள், 15 வெள்ளிப் பதக்கங்கள், 13 வெண்கலப் பதக்கங்கள்.

வட மத்திய மாகாணம் :18 தங்கப்பதக்கங்கள், 21 வெள்ளிப் பதக்கங்கள், 10 வெண்கலப் பதக்கங்கள்

ஊவா மாகாணம் : 17 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளிப் பதக்கங்கள், 8 வெண்கலப் பதக்கங்கள்

கிழக்கு மாகாணம் : 7 தங்கப் பதக்கங்கள், 8 வெளளிப் பதக்கங்கள்,  3 வெண்கலப் பதக்கங்கள்

வட மாகாணம் : ஒரு வெள்ளிப் பதக்கம், 3 வெண்கலப் பதக்கங்கள்.

 

 

 

----
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .