Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய அணியுடனான ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 391 ஓட்டங்கள் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேர்த் நகரில் நடைபெறும் இப்போட்டியில் இன்றைய மூன்றாவது நாள் ஆட்டமுடிவின்போது இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இரண்டாவது நாளான நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்களைப் பெற்றிருந்த அவுஸ்திரேலிய அணி இன்று 309 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. மைக் ஹஸி 116 ஓட்டங்களையும் ஷேன் வட்சன் 95 ஓட்டங்களையும் பெற்றனர்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் கிறிஸ் ட்ரெம்லட் 87 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் ஸ்டீவன் பின் 97 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி ஆட்டமுடிவின்போது 3 விக்கெட் இழப்பிற்கு 81 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அவ்வணி வெற்றி பெறுவதற்கு மேலும் 310 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.
16 minute ago
1 hours ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
3 hours ago
9 hours ago