2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

5ஆவது போட்டிக்கான அவுஸ்ரேலிய குழாம் அறிவிப்பு

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 08 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்ரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், அவுஸ்ரேலிய அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 5வதும், இறுதியமான ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கான அவுஸ்ரேலிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் இன்றைய போட்டியில் பங்குபற்றிய மத்தியூ வேட், கிளென் மக்ஸ்வெல் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. அவர்கள் இருவரும் நாளைய தினம் இந்தியாவிற்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளதன் காரணமாகவே இப்போட்டிக்காகச் சேர்க்கப்படவில்லை.

இவர்கள் இருவருக்கும் பதிலாக பிரட் ஹடின், நேதன் கோர்ட்டர் நீல் ஆகியோர் அவுஸ்ரேலியக் குழாமில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்தோடு இன்றைய போட்டியில் உடல் உபாதை காரணமாகப் பங்குபற்றியிருக்காத ஜோர்ஜ் பெய்லி 5வது போட்டிக்கான குழாமில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜோர்ஜ் பெய்லிக்கு பதிலாக இன்றைய போட்டியில் பங்குபற்றிய அடம் வோகஸ் 5ஆவது போட்டிக்கான குழாமிலும் இடம்பெற்றுள்ளார். 5வது ஒருநாள் சர்வதேசப் போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிவிக்கப்பட்டுள்ள குழாம்:
ஷேன் வொற்சன், ஆரொன் ஃபின்ச், பிலிப் ஹியூஸ், மைக்கல் கிளார்க், ஜோர்ஜ் பெய்லி, அடம் வோகஸ், பிரட் ஹடின், மிற்சல் ஜோன்சன், ஜேம்ஸ் ஃபோள்க்னர், பென்கட்டிங், நேதன் கோர்ட்டர் நீல், கிளின்ட் மக்காய், ஷேவியர் டொகேர்ட்டி

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--