Kogilavani / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று வியாழக்கிழமை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6ஆவது இரட்டைச் சதத்தைப் பெற்றுள்ளார்.
பெங்களுரில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காவது நாளான இன்று காலை, டென்டுல்கர் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை விளாசினார்.
மூன்றாவது நாளான நேற்று 191 ஓட்டங்களை பெற்றிருந்த டெண்டுல்கர் இன்று 214 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
சச்சின் டெண்டுல்கார் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக பெற்ற இரண்டாவது இரட்டைச் சதம் இதுவாகும். இதற்குமுன் 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிட்னியில் நடைபெற்ற போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 241 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இப்போட்டியில் பெங்களுர் டெஸ்ட்டில் அறிமுக வீரரான பீட்டர் ஜோர்ஜின் பந்துவீச்சில் டெண்டுல்கர் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகில் டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் பெற்ற ஒரே வீரராக சச்சின் டெண்டுல்கர் விளங்குகின்றார்.
டெண்டுல்கர் இவ்வருடம் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 1194 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒரு வருடத்தில் அவர் 1000 இற்கு மேற்பட்ட ஓட்டங்களைக் கடந்தமை 6 ஆவது தடவையாகும்.
ரிக்கி பொன்டிங், மத்தியூ ஹைடன், பிரையன் லாரா ஆகியோர் வருடத்தில் 1000 ஓட்டங்கள் எனும் இலக்கை 5 தடவை அடைந்துள்ளனர்.
அத்துடன் டெண்டுல்கரின் இவ்வருடத்தின் டெஸ்ட் துடுப்பாட்டச் சராசரி எண்ணிக்கை 99.5 என்பது குறிப்பிடத்தக்கது.
49 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
56 minute ago
1 hours ago