2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

இலங்கை அணிக்கு 9 விக்கெட் வெற்றி

Super User   / 2011 மார்ச் 01 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கென்ய அணியுடனான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 9 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கென்ய அணி  43.4 ஓவர்களில் 142 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

கென்ய அணி சார்பில் கொலின்ஸ் ஒபுயா 52 ஓட்டங்களையும் டேவிட் ஒபுயா 51 ஓட்டங்களையும் பெற்றனர். அவ்வணி சார்பில் வேறு எவரும் 10 ஓட்டங்களைக்கூட பெறவில்லை.நஹீமியா ஒதியாம்போ 8 ஓட்டங்களைப்பெற்றார்.

லசித் மாலிங்க 38 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதில் ஹெட்ரிக் சாதனையொன்றும் அடங்கும்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இலங்கை அணி வீரர்களில் திலகரட்ன 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். உபுல் தரங்க ஆட்டமிழக்காமல்76 ஓட்டங்களையும் குமார் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

லசித் மாலிங்க இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--