2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை அபிவிருத்தி அணியை இலகுவாக வென்றது இலங்கை "ஏ"

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முத்தரப்பு முதற்தரப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை "ஏ" அணி வெற்றிபெற்றுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி அணியை இலங்கை "ஏ" அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி கொண்டது.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை "ஏ" அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி அணி அணித்தலைவர் லஹிரு திரிமன்னவின் ஆட்டமிழக்காத 95 ஓட்டங்கள், நிரோஷன் டிக்வெல்லவின் 46 ஓட்டங்கள், ஷெஹான் ஜெயசூரியவின் 33 ஓட்டங்களின் துணையோடு 265 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் இலங்கை "ஏ" அணி சார்பாக கனிஷ்க அல்விற்றிகல, நுவான் பிரதீப் இருவரும் தலா 3 விக்கெட்டுக்களையும், விமுக்தி பெரேரா, டில்ருவான் பெரேரா இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை "ஏ" அணியின் தலைவர் டினேஷ் சந்திமாலின் 162 ஓட்டங்கள், சத்துரங்க டீ சில்வாவின் 76 ஓட்டங்கள், டில்ருவான் பெரேராவின் 52 ஓட்டங்கள், பானுக ராஜபக்‌ஷவின் 34 ஓட்டங்களின் துணையோடு அவ்வணி 449 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் சீக்குகே பிரசன்ன 3 விக்கெட்டுக்களையும், ஷமின்ட எரங்க, தரிந்து கௌஷால், கசுன் மதுஷங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், விஸ்வா பெர்னான்டோ ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி அணியின் நிரோஷன் டிக்வெல்லவின் 94 ஓட்டங்கள், லஹிரு திரிமன்னவின் 46 ஓட்டங்கள், ஷெஹான் ஜெயசூரியவின் 46 ஓட்டங்கள், குசால் பெரேராவின் 36 ஓட்டங்களின் துணையோடு அவ்வணி 276 ஓட்டங்களைப் பெற்றது.

பந்துவீச்சில் இலங்கை "ஏ" அணி சார்பாக விமுக்தி பெரேரா, டில்ருவான் பெரேரா, அஷன் பிரியஞ்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், நுவான் பிரதீப், கனிஷ்க அல்விற்றிகல, சத்துரங்க டீ சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

93 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆடிய இலங்கை "ஏ" அணி, அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பபசர வடுகேயின் ஆட்டமிழக்காத 54 ஓட்டங்களின் துணையோடு 3 விக்கெட்டுக்களை இழந்து அந்த இலக்கை அடைந்தது.

பந்துவீச்சில் இலங்கை கிரிக்கெட் சபை அபிவிருத்தி அணியின் விஸ்வா பெர்னான்டோ 2 விக்கெட்டுக்களையும், கசுன் மதுஷங்க ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--