2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

எம்.சி.சி, எக்ஸாவை எரித்துவிடலாம்: சஜித் அழைப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 21 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.சி.சி, எக்ஸா, உள்ளிட்ட நாட்டுக்கு பாதகமான சகல ஒப்பந்தங்களையும் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் வைத்து அவற்றை கிழித்து எறித்துவிட வேண்டுமென முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார். 

களுத்துறையில் நடைபெற்ற நிக​ழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

நாட்டுக்கு அவசியமற்ற ஒப்பந்தங்களை கைசாத்திட வேண்டா​ம் என்பதை கூறியே 69 இலட்சம் பேர் புதிய ஜனாதிபதிக்கு வாக்களித்தனர் எனத் தெரிவித்த அவர், அந்த மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார். 

அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியினர் சகலரும், அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக ஒன்றுபட வேண்டியது அவசியமென தெரிவித்த அவர் அக்கட்சிக்குள் பிரதமர் வேட்பாளர் என்ற புதியதொரு பதவி அந்தஸ்த்து கொண்டுவரப்பட்டுள்ளதை தான் வேடிக்கையாக கருதுவதாகவும் தெரிவித்தார். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .