Editorial / 2019 செப்டெம்பர் 17 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எழுத்துமூலம் அறிவித்த போதும், அதற்கான பதில் இதுவரை தனக்கு கிடைக்கப்பெறவில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தலைமையிலான தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (17) காலை நடைபெற்றது.
கொழும்பிலுள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, கருத்து வெளியிட்ட சஜித், கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்றக் குழு ஆகியவற்றின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக நம்புவதாகவும் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஜனநாயக ரீதியில் செயற்படும் என தாம் நம்புவதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கு தனது கட்சியில் வேறு யாரேனும் ஒருவருக்கு விருப்பம் இருப்பின் அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தான் கையளித்த கடிதத்தில் கோரியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரமசிங்க , கபீர் ஹாசிம், ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
32 minute ago
1 hours ago
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
1 hours ago
7 hours ago