Editorial / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான 8ஆவது சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது.
இதற்கு முன்னர் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் 7 தடவைகள் பேச்சுவார்த்தை இடம்பெற்ற போதும் அவை வெற்றியளிக்கவில்லை.
இந்த நிலையில், இன்றைய பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகள் குழுவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
45 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago