2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

’மேலதிகமாக கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்க்கின்றேன்’

Editorial   / 2017 ஜூன் 19 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டபூர்வமானதும் சுதந்திரமானதுமான எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைவிக்கக்கூடாது என்பதனை, குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் நான் தெரியப்படுத்துவேன் என, எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தெசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தங்களது 19.06.2017 திகதியிடப்படட கடிதத்துக்கு நன்றி. நீங்கள் கூறியுள்ள அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டுள்ளேன்.

மேலும், மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த விடயம் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என்று தெரிவித்து, ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் பேரருடன் திரு. வணபிதா. ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதமும் கிடைத்துள்ளது.

சட்டபூர்வமானதும் சுதந்திரமானதுமான எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைவிக்கக்கூடாது என்பதனை, குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் நான் தெரியப்படுத்துவேன்.

நான், தற்போது தொலைபேசியில்,  வடமாகாண ஆளுநரை தொடர்புகொண்டு, குறித்த நம்பிக்கையில்லாப் பிரரேரணை ​வாபஸ் பெறப்படும் என்று தெரிவித:துள்ள அதேவேளை, சம்பந்தப்பட்ட நபர்களோ தொடர்பிலுள்ளேன்.

நாம் வெகுவிரைவில் சந்தித்து பல பிரச்சினைகள் தொடர்பில் மேலதிகமாக கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்க்கின்றேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X