2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

UPDATE : இரண்டாவது நாளாக சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலை

Editorial   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


UPDATE : கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் இரண்டாவது நாளாக இன்று (10) முன்னிலைப்படுத்தப்பட்ட கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர், அங்கிருந்து வெளியேறியுள்ளார்.


நவம்பர் 25 ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் இரண்டாவது நாளாக இன்று (10) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 

நவம்பர் 25 ஆம் திகதி கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஊழியர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மூன்றாவது நாளாக இன்று (10) ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி கடந்த 25 ஆம் திகதி தனது அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடு திரும்பும் போது கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. அதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விடயங்களை முன்வைத்தனர்.

அதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி குறித்த அதிகாரி வாக்குமூலம் வழங்க வேண்டும் என சுவிஸ் தூதரகத்துக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்படும் குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று முன்தினம் (08) இரவு முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்.

அத்துடன்,  குறித்த பெண் ஊழியர், கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் நேற்று (09) பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கினார்.

இதனையடுத்து, இன்று (10) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்ற குறித்த ஊழியர் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--