Editorial / 2020 ஏப்ரல் 13 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
தனது 87 வயதில் கடந்த வெள்ளிக்கிழமை (10) இறையடி எய்திய, கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் ஏழாவது பேராயராக பதவி வகித்த அதி வணக்கத்திற்குரிய நிக்கலஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ ஆண்டகையின் பூதவுடல், இன்று (13) நீர்கொழும்பு புனித மரியாள் தேவாலயத்தில் இறுதி நல்லடக்க திருப்பலி நடைப்பெற்று, அரச மரியாதையுடன் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்வில, ; நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் வருகைதந்த கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் குருக்கள் பங்குபற்றினர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிலர் மாத்திரமே இறுதி நிகழ்வில் பங்குபற்றினர்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன., அமைச்சர் ஜோன்ஸ்டன் பெரணான்டோ இராஜாங்க அமைச்சர் நிமல் லன்ஸா, நீர்கொழும்பு மேயர் தயான் லன்ஸா உட்பட முக்கியஸ்தர்கள் சிலர் இறுதி திருப்பலி நிகழ்வில் பங்குபற்றினர்.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சார்பில் இரங்கல் உரை நிகழ்த்தினார்.

6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago