2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

ஊடகவியலாளர் நடேசனின் நினைவுப்பேருரை

Suganthini Ratnam   / 2016 மே 29 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 12ஆவது நினைவுப்பேருரை நிகழ்வு மட்டக்களப்பு, பிள்ளையாரடி மன்றேசா வீதியிலுள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்கக் கட்டடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதன்போது, மறைந்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவஞ்சலி செலுத்தப்பட்டு சுடர் ஏற்றப்பட்டது.

ஊடகவியலாளர் ஜி.நடேசன், நெல்லை நடேசன் எனப் பலராலும் அறியப்பட்ட ஐயாத்துரை நடேசன்;, 2004ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி, தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அலுவலகத்துக்குச்; சென்று கொண்டிருந்தபோது, மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார். (படப்பிடிப்பு: எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்,வா.கிருஸ்ணா,எஸ்.சபேசன் த.தவக்குமார்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .