2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

கரையொதுங்கிய பாரிய மீன்கள் …

Editorial   / 2020 ஜூன் 21 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தின் இருவேறு இடங்களில் இன்று (21) காலை பாரிய மீன்கள் கரையொதுங்கியிருந்தன. பொத்துவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோமாரி - 2 பிரதேசத்தில் அரியவகை நீல திமிங்கிலமொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

இதனை அவதானித்த பிரதேச வாசிகள் அப்பகுதி கடற்படையினருக்கு அறிவித்துள்ளனர். இதன்போது, சம்பவ இடத்துக்கு வருகை தந்த கடற்படையினர், கரை ஒதுங்கிய மீனை பார்வையிட்டனர்.

இதேவேளை, அம்பாறை மருதமுனை - பெரியநீலாவணை கடற்கரையில் இராட்சத சுறாமீன் பிடிபட்டு கரைக்கு  கொண்டுவரப்பட்டது.

சுமார் 20 அடி கொண்ட இந்த மீன் 1500 கிலோகிராமுக்கு அதிக எடை கொண்டுள்ளதாக  மீனவர்கள் தெரிவித்தனர் . எனினும், குறித்த அரிய வகை புள்ளி சுறா,  பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய மீண்டும் கடலில் விடப்பட்டது.

இந்த நிலையில், கரைவலை மீனவர்களது வலையில் சிக்கிய இராட்சத மீன், கரையொதுங்கிய மீனை பார்வையிட பெருமளவு மக்கள் அப்பகுதிகளுக்கு வருகை தந்திருந்தனர்.

எஸ்.கார்த்திகேசு, பாறுக் ஷிஹான், கனகராசா சரவணன், க.விஜயரெத்தினம், நடராஜன் ஹரன், ஏ.எல்.எம்.ஷினாஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .