Editorial / 2020 மே 19 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
நுவரெலியா மாவட்டத்தில் நீடித்துவரும் அதிக மழை வானிலை காரணமாக, மகாவலி கங்கை பெருக்கெடுத்ததால், நாவலப்பிட்டி நகரின் ஒருபகுதி, இன்று (19) வெள்ளத்தில் மூழ்கியது.
நாவலப்பிட்டி தபால் நிலையத்திலிருந்து பொலிஸ் நிலையம் வரையிலான பகுதி, வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளநீர் வடிந்தோடுவதற்கு வழியில்லாததன் காரணமாக இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாக, நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, நாவலப்பிட்டி வெலிகம்பொல இசிபதனாராம விகாரையில், போதி பூஜை செய்வதற்கான இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு மதில் உடைந்து விழுந்ததில், விகாரையின் வளாகம் சேதமடைந்துள்ளது.




1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago