2020 நவம்பர் 28, சனிக்கிழமை

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து…

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளையில், 5,000 மெற்றிக்தொன் நிறையுடைய மரக்கறி மற்றும் பழங்களைக் களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய, வெப்பநிலை கட்டுப்பாட்டுக் கிடங்கை நிர்மாணிப்பதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.

இந்தத் திட்டத்துக்காக, இந்திய அரசாங்கம், 300 மில்லியன் இலங்கை ரூபாயை நிதியுதவியளிக்கவுள்ளது.

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவராலயத்தில், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி. ஹர்ஷா டி சில்வா முன்னிலையில் இன்று (17) இடம்பெற்றது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தராஜித் சிங் சந்து, இலங்கை தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டீ.எஸ். ருவன்சந்திர ஆகியோர் கைச்சாத்திட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--