2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வூட்டல்...

Princiya Dixci   / 2021 ஜனவரி 04 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்19 தொற்றைக் தடுப்பதற்கான விழிப்புணர்வூட்டல் திட்டத்தின் ஓர் அங்கமாக திருகோணமலை, அநுராதபுர சந்தியில் துண்டுப் பிரசுரங்களை, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலைக் கிளைத் தொண்டர்கள், இன்று (04) விநியோகித்தனர். 

இதன்போது சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.  திருகோணமலை மாவட்டக் கிளை நிறைவேற்று அதிகாரி வ.தர்மபவன் ஆரம்பித்து வைத்த இந்தச் செயற்பாட்டில், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டர்களுடன் திருகோணமலைக் கிளையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியும் தற்போதைய பதில் செயலாளருமான டொக்டர் என். ரவிச்சந்திரனும் கலந்துகொண்டார்.

(படங்கள் - அப்துல்சலாம் யாசீம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .