2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

ஹட்டனில் பொங்கல் விழா

Kogilavani   / 2021 ஜனவரி 15 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ரமேஸ்

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில், பொங்கல் விழா, ஹட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையத்தில், இன்று (15) நடைபெற்றது.

இதன்போது சிறுவர்களின் பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்ளும் வழங்கப்பட்டன.

சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபாகார்த்த மன்றத்தின் கீழ், பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படும் 48 பிரஜாசக்தி நிலையங்களுக்கு, அதிநவீன கணினிகள்,  உபகரணங்கள் என்பனவும் வழங்கப்பட்டன.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வுபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. 

\இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், கலந்துகொண்டு உபகரணங்கள் மற்றும் பரிசில்களை வழங்கி வைத்தார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .