Editorial / 2019 மே 15 , பி.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடப்பு பருவகாலத்துடன் ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டிலிருந்து விலகுவதாக அக்கழகத்தின் முன்களவீரரான அன்டோனி கிறீஸ்மன் அறிவித்துள்ளார்.
அத்லெட்டிகோ மட்ரிட்டில் 2014ஆம் ஆண்டு இணைந்திருந்த அன்டோனி கிறீஸ்மன், கடந்தாண்டு ஜூன் மாதத்திலேயே ஐந்தாண்டு ஒப்பந்தமொன்றில் அத்லெட்டிகோ மட்ரிட்டுடன் கைச்சாத்திட்டிருந்தபோதும், குறித்த ஒப்பந்தத்திலுள்ள அன்டோனி கிறீஸ்மனை வாகுவதற்குரிய 120 மில்லியன் யூரோக்களை இன்னொரு ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யூரோப்பா லீக், ஸ்பானிய சுப்பர் கிண்ணம், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சுப்பர் கிண்ணங்களை அத்லெட்டிகோ மட்ரிட்டில் வென்ற அன்டோனி கிறீஸ்மன், அத்லெட்டிகோ மட்ரிட்டுக்காக 256 போட்டிகளில் பங்குபற்றி 133 கோல்களைப் பெற்றிருந்தார்.
அந்தவகையில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சுடன் இணைய சக பின்களவீரரான லூகாஸ் ஹெர்ணான்டஸ் இணங்கியுள்ளதுடன், இன்னொரு சக பின்களவீரரரும் அணித்தலைவருமான டியகோ கொடினும் நடப்பு பருவகாலத்துடன் அத்லெட்டிகோ மட்ரிட்டிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில், நடப்பு பருவகாலத்துடன் அத்லெட்டிகோ மட்ரிட்டிலிருந்து வெளியேறும் மூன்றாவது வீரராக அன்டோனி கிறீஸ்மன் மாறுகிறார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
31 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
31 Oct 2025