2021 மார்ச் 06, சனிக்கிழமை

அலுப்பூட்டுவதற்குத் தயாராகும் அஷ்வின்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 14 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளரான இரவிச்சந்திரன் அஷ்வின், கரீபியன் தீவுகளில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரில், துடுப்பாட்ட வீரர்களை அலுப்பூட்டுவதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடர், ஜூலை 21ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், அது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அஷ்வின் இவ்வாறு தெரிவித்தார்.

கரீபியன் தீவுகள் காணப்படும் ஆடுகளங்கள், மிகவும் மெதுவானவையாக மாறியுள்ளதோடு, பந்துவீசுவதற்குக் கடினமாவையாக மாறியுள்ளன அது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அஷ்வின், "காணப்படும் ஆடுகளங்கள், வெப்பநிலை காரணமாக, இந்தத் தொடர் சவாலானதாகக் காணப்படுமென நான் உறுதியாக நினைக்கிறேன். இறுதியாக இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் நான் கண்டுகொண்டதன்படி, ஆடுகளங்கள் மிகவும் மெதுவானவையாகும். நாள் முழுவதும், துடுப்பாட்ட வீரர்களுக்கு அலுப்பூட்டும் விதமாகப் பந்துவீச வேண்டியிருக்குமென எனக்குத் தெரியும்" என்றார்.

பயிற்சிப் போட்டியில் அவர் விளையாடியிருக்காத போதிலும், பந்துவீசிய அமித் மிஷ்ராவைப் பார்த்து, ஆடுகளங்களின் நிலைமையைப் புரிந்து கொண்டதாகத் தெரிவித்த அஷ்வின், "ஆடுகளங்கள் தொடர்ந்தும் மெதுவானவையாக மாறுகின்றன. ஆடுகளங்கள் சுழற்சிக்கு உதவி வழங்கி, சுழலத் தொடங்குமாயின், எங்களின் வழக்கமான பந்துவீச்சைப் போல் வீசலாம். அதுவரை, பொறுமையையே கடைப்பிடிக்க வேண்டியுள்ளது" என்று தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .