2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

ஆர்சனலை வீழ்த்திய மன்செஸ்டர் சிற்றி

Editorial   / 2020 ஜூன் 18 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரானது மூன்று மாதங்களின் பின்னர் ஆரம்பித்த நிலையில், நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும், ஆர்சனலுக்குமிடையிலான போட்டியில் மன்செஸ்சர் சிற்றி வென்றது.

இப்போட்டியின் முதற்பாதி முடிவடையும் தறுவாயில் மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரர் ரஹீம் ஸ்டேர்லிங் பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்ற அவ்வணி, இரண்டாவது பாதியின் ஐந்தாவது நிமிடத்தில் தமது மத்தியகளவீரர் கெவின் டி ப்ரூனே பெற்ற கோலின் மூலம் முன்னிலையை இரட்டிப்பாக்கியதுடன், போட்டி முடிவடையும் தறுவாயில் மாற்றுவீரராகக் களமிறங்கிய மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரர் பில் பொடென் பெற்ற கோல் காரணமாக இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் சிற்றி வென்றது.

இப்போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 82 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் லிவர்பூல் காணப்படுவதுட்டன், இரண்டாமிடத்தில் 60 புள்ளிகளுடன் மன்செஸ்டர் சிற்றியும், 53 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லெய்செஸ்டர் சிற்றியும் காணப்படுகின்றது. நான்காமிடத்தில் 48 புள்ளிகளுடன் செல்சி காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--