2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

இலங்கையின் கிரிக்கெட் பணிப்பாளராக மூடி?

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 22 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் பணிப்பாளராக, மூன்றாண்டு ஒப்பந்தமொன்றில் இலங்கையணியின் முன்னாள் பயிற்சியாளர் டொம் மூடி மாறவுள்ளார் எனத் தெரிகின்றது.

புதிதாக உருவாக்கப்பட்ட குறித்த பதவியே இலங்கையில் ஏறத்தாழ அனைத்து விடயங்களையும் கிரிக்கெட் தொடர்பாக கையாளவுள்ளது.

இலங்கையின் பயிற்சியாளராக 2005ஆம் ஆண்டு முதல் 2007ஆம் வரை மூடி காணப்பட்ட நிலையில், அவரின் பயிற்றுவிப்பின் கீழ் 2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதிபெற்றிருந்தது.

இந்நிலையில், மூடியின் நியமனம் தொடர்பில் இவ்வாரமளவில் இறுதி முடிவுக்கு இலங்கை கிரிக்கெட் சபை வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .