Editorial / 2026 ஜனவரி 30 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

இஸ்லாமிய ஷரியா சட்டத்தை மீறி திருமணத்திற்கு புறம்பாக உடலுறவு கொண்டதற்கும், மது அருந்தியதற்கும் ஆணொருவருக்கும் பெண்ணொருவருக்கும் தலா 140 கசையடிகள் வழங்கப்பட்டன. இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்திலேயே அந்த ஜோடிக்கு கசையடிகள் வழக்கப்பட்டள்ளது.
பொது பூங்கா ஒன்றில் மக்கள் முன்னிலையில் இந்த தண்டனை வியாழக்கிழமை (ஜன 29) நிறைவேற்றப்பட்டது. திருமணத்திற்கு புறம்பான உறவுக்காக 100 அடிகளும், மது அருந்தியதற்காக 40 அடிகளும் என மொத்தம் 140 கசையடிகள் வழங்கப்பட்டன.
21 வயதுடைய அந்தப் பெண், கசையடிகளைத் தாங்க முடியாமல் கதறி அழுது பின்னர் மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் அங்கிருந்த நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
இதே மேடையில், மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததற்காக (Khalwat) ஷரியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கும், அந்தப் பெண்ணுக்கும் தலா 23 கசையடிகள் வழங்கப்பட்டன. அந்த அதிகாரி பணியிலிருந்து நீக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருந்தாலும், ஆச்சே மாகாணத்தில் மட்டும் 2001-ம் ஆண்டு முதல் ஷரியா சட்டம் அமுலில் உள்ளது. இங்கு சூதாட்டம், மது அருந்துதல், ஓரினச்சேர்க்கை மற்றும் திருமணத்திற்கு புறம்பான உறவுகளுக்கு கசையடி வழங்குவது சட்டப்பூர்வமான தண்டனையாக உள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago