Editorial / 2026 ஜனவரி 30 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டத்தின் 5 ஆவது பதிப்பை சுயாதீன சிந்தனைக் குழாமான வெரிட்டேரிசர்ச், தற்போது வெளியிட்டுள்ளது.
இது வரவு- செலவுத்திட்டத்தின் நான்கு அம்சங்களை ஆராய்கிறது:
(1) அனுமானங்கள்,
(2) துல்லியம்,
(3) இணக்கம்,
(4) போதியத்தன்மை.
நிதி, பொருளாதார மற்றும் நிதி அடித்தளங்களின் அனுமானங்கள். மதிப்பீடுகளின் அடிப்படை மற்றும் கணிப்பீட்டின் துல்லியம். அரச நிதி முகாமைத்துவ (PFM) சட்டத்துடனான இணக்கம், மற்றும் தகவல் மற்றும் இலக்கங்களின் நம்பகத்தன்மை தொடர்பான போதியத்தன்மை.
இந்த அறிக்கையும் அது தொடர்பான பகுப்பாய்வும், வெரிட்டேரிசர்ச் இன் அரச நிதி தொடர்பான தரவு மற்றும் விரிவான பார்வைகளுக்கான ஒரு மையத்தளமான PublicFinance.lk இல் கிடைக்கிறது.
2026 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத்திட்டத்தின் நிலை அறிக்கையானது, மதிப்பிடப்பட்ட முன்னைய வருடங்களிலிருந்து ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக்காட்டுகிறது. அதாவது, வரவு- செலவுத்திட்டத்தில் உள்ள வருமான மதிப்பீடுகள் தற்போதைய கொள்கை சூழலுக்குள் யதார்த்தமானதாகவும் நியாயமானதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளன – கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமை காணப்படவில்லை.
வரவு- செலவுத்திட்டத் தயாரிப்பு மற்றும் சமர்ப்பணம் தொடர்பான நீண்டகால கரிசனைகள் பல தீர்க்கப்படாமல் உள்ளதையும் இவ்வறிக்கை காட்டுகிறது. இதில் முரணான தகவல்கள், விடுபட்ட மதிப்பீடுகள் மற்றும் வரவு-செலவுத்திட்டத் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட முக்கியமான அனுமானங்களின் போதுமான அளவு வெளிப்படுத்தல் ஆகியவை அடங்குகின்றன.
53 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago