2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

இலங்கை எதிர் இங்கிலாந்து: 2ஆவது டெஸ்ட் நாளை ஆரம்பிக்கின்றது

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 21 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியானது காலியில் நாளை காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

அந்தவகையில், முதலாவது போட்டியில் தோற்ற இலங்கை, தொடரைச் சமப்படுத்துவதற்கு இப்போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்திலுள்ளது. ஆக, இலங்கையிடமிருந்து மேம்படுத்தப்பட்ட பெறுபேறு எதிர்பார்க்கப்படுகின்றது.

துடுப்பாட்டமே இலங்கைக்குச் சிக்கலாகக் காணப்படுகின்ற நிலையில், ஒவ்வொரு இனிங்ஸிலும் சிரேஷ்ட அஞ்சலோ மத்தியூஸ் தவிர, தினேஷ் சந்திமால், நிரோஷன் டிக்வெல்ல உள்ளிட்டோர் பொறுப்பாகத் துடுப்பெடுத்தாட வேண்டியுள்ளது.

குழாமிலிருந்து நீக்கப்பட்ட குஷல் மென்டிஸை பிரதியிடக் கூடியவர்களான ஒஷாத பெர்ணான்டோ, றொஷேல் சில்வா ஆகியோர் இலங்கையின் துடுப்பாட்டத்துக்கு பலம் சேர்க்கலாம். குறித்த மாற்றம் தவிர இலங்கையணியில் வேறு மாற்றமிருக்காது என நம்பப்படுகிறது.

இந்நிலையில், முதலாவது போட்டியில் வென்றபோதும் இங்கிலாந்தின் முழு வேகப்பந்துவீச்சு வரிசையும் ஜேம்ஸ் அன்டர்சன், கிறிஸ் வோக்ஸ், ஒலி ஸ்டோனால் பிரதியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர இங்கிலாந்து அணியில் வேறு மாற்றமெதுவும் இருக்காது எனக் கூறப்படுகிறது.

எவ்வாறெனினும், இப்போட்டியைத் தொடர்ந்து இந்தியாவுக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ள நிலையில், ஆரம்பத்துடுப்பாட்டவீரர்கள் டொம் சிப்லி, ஸக் குறொலியிடமிருந்து மேம்பட்ட பெறுபேறுகள சுழற்பந்துவீச்சுக்கெதிராக இங்கிலாந்து எதிர்பார்க்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .