2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

இலங்கை கிரிக்கெட் பெளதிக பெறுபேற்று முகாமையாளராக லுடென்

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 11 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை கிரிக்கெட் சபையின் பெளதிக பெறுபேற்று முகாமையாளராக கிரான்ட் லுடெனை நேற்றிலிருந்து நியமித்துள்ளதாக ஊடக வெளியீடொன்றின் மூலம் இன்று இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

உடற்றகுதியில் நிபுணரான லுடென், இலங்கையின் முன்னணி வீரர்களை மேம்படுத்துவதில் கவனஞ் செலுத்தவுள்ளதுடன், இலங்கை கிரிக்கெட் சபையின் அனைத்து உடற்றகுதித் திட்டங்களுக்கும் பொறுப்பாக இருப்பார் என இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னர் உடற்றகுதி, களத்தடுப்பு அயிற்சியாளராக பாகிஸ்தானின் கிரிக்கெட் சபையில் 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை இருந்ததோடு, பங்களாதேஷ் கிரிக்கெட் சபையில் உடற்றகுதி நிபுணராக 2008ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரையில் இருந்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .