2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரை மீண்டும் கைப்பற்றுமா இங்கிலாந்து?

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 13 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, காலியில் நாளை காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்டுடன் ஆரம்பிக்கின்றது.

கடந்த முறை இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்தானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என இலங்கையை வெள்ளையடித்திருந்த நிலையில் இத்தொடர் அவதானம் பெறுகின்றது.

அத்தொடரில் நாயகர்களான அடில் ரஷீட், கீட்டன் ஜெனிங்ஸ் ஆகியோர் இம்முறை இங்கிலாந்துக் குழாமிலேயே இல்லாததோடு, மொயின் அலி, பென் ஃபோக்ஸ் உள்ளிட்டோர் முதலாவது போட்டியில் விளையாடும் வாய்ப்பைக் கொண்டிருக்கவில்லை.

எனினும், ஜேக் லீச் அணியில் இடம்பெறுவார் என்பதோடு, அவருடன் சேர்ந்து டொம் பெஸ்ஸின் பெறுபேறுகளே இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்புகளைத் தீர்மானிக்கப் போகின்றது.

அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், றொஷேன் சில்வாவின் மீள்வருகை இலங்கைக்கு உற்சாகமளிப்பதுடன், விளையாடுவர் என எதிர்பார்க்கப்படும் டில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய, வனிடு ஹஸரங்க சுழற்பந்துவீச்சுக் குழாமானது இங்கிலாந்தை விட இலங்கைக்கு முன்னிலையை வழங்குகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .