Editorial / 2020 ஜூலை 24 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், உடினீஸின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான ஜுவென்டஸ் தோற்றது.
இப்போட்டியின் 42ஆவது நிமிடத்தில் ஜுவென்டஸின் பின்களவீரர் மத்தியாஸ் டி லிஜிட் பெற்ற கோல் காரணமாக முதற்பாதியில் அவ்வணி முன்னிலை வகித்தது.
எனினும், இரண்டாவது பாதியின் ஏழாவது நிமிடத்தில் உடினீஸின் முன்களவீரரான லிலிஜா நெஸ்டொரோவ்ஸ்கி பெற்ற கோல் மூலம் கோலெண்ணிக்கையை அவ்வணி சமப்படுத்தியதுடன், போட்டி முடிவடையும் கணத்தில் தமது மத்திய கள வீரர் செகோ பொஃபனா பெற்ற கோல் காரணமாக இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
இதேவேளை, தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற கைகரியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் லேஸியோ வென்றது. லேஸியோ சார்பாக, சேர்ஜி மிலிங்கோவிச்-சவிச், சிரோ இம்மொபைலி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். கைகரி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜியோவனி சிமியோன் பெற்றிருந்தார்.
7 hours ago
8 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
24 Mar 2026