2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

உலகக் கிண்ணம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து

Editorial   / 2019 ஜூன் 09 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் 12ஆவது உலகக் கிண்ணத் தொடரில், டெளண்டனில் நேற்று இடம்பெற்ற ஆப்கானிஸ்தானுடனான போட்டியை நியூசிலாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

ஆப்கானிஸ்தான்: 172/10 (41.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹஷ்மத்துலா ஷகிடி 59 (99), ஹஸரத்துல்லா ஸஸாய் 34 (28), நூர் அலி ஸட்ரான் 31 (38) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜேம்ஸ் நீஷம் 5/31 [10], லொக்கி பெர்கியூசன் 4/37 [9.1])

நியூசிலாந்து: 173/3 (32.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்சன் ஆ.இ 79 (99), றொஸ் டெய்லர் 48 (52) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஃப்தாப் அலாம் 3/45 [8.1])

போட்டியின் நாயகன்: ஜேம்ஸ் நீஷம்

இந்நிலையில், கார்டிஃப்பில் நேற்று இடம்பெற்ற மற்றைய போட்டியில் பங்களாதேஷை இங்கிலாந்து வீழ்த்தியிருந்தது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து, ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் ஜேஸன் றோயின் 151 (121), ஜொனி பெயார்ஸ்டோவின் 51 (50) ஓட்டங்களோடு சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றதுடன், ஜொஸ் பட்லரின் 64 (44), லியம் பிளங்கெட்டின் ஆட்டமிழக்காத 27 (09), கிறிஸ் வோக்ஸின் ஆட்டமிழக்காத 18 (08) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 386 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு, 387 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷுக்கு, ஷகிப் அல் ஹஸனின் 121 (119), முஷ்பிக்கூர் ரஹீமின் 44 (50) ஓட்டங்கள் தவிர வேறெவரும் குறிப்பிடத்தக்க ஓட்டங்களைப் பெறாமல் ஜொவ்ரான் ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், மார்க் வூட்டிடம் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 280 ஓட்டங்களையே பெற்று 106 ஓட்டங்களால் பங்களாதேஷ் தோல்வியடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .