2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

எல்.பி.எல்லிருந்து விலகிய மலிங்க, கெய்ல்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 19 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கிலிருந்து (எல்.பி.எல்) இலங்கையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணித்தலைவர் லசித் மலிங்க, மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் அணித்தலைவரான கிறிஸ் கெய்ல் ஆகியோர் விலகியுள்ளனர்.

காயம் காரணமாக இலங்கைக்கு வரவில்லை என கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு கெய்ல் தெரிவித்துள்ள நிலையில், போதுமான தயார்படுத்தல் நேரமில்லாமையை காரணங்காட்டி மலிங்க விலகியுள்ளார்.

இதேவேளை, ஜஃப்னா ஸ்டாலியன்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ரவி பொப்பாராவும் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில், வர்ணனையாளராக இலங்கைக்கு ஆரம்பத்தில் வந்த தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரரான ஹேர்ஷல் கிப்ஸ், கொழும்பு கிங்ஸ் அணியின் பயிற்சியாளராகியுள்ளதுடன், கிப்ஸின் உதவிப் பயிற்றுவிப்பாளராக இலங்கையின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் காணப்படுகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .