2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

எவெர்ற்றனுக்குச் செல்லும் ஜேம்ஸ் றொட்றிகாஸ்?

Editorial   / 2020 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட்டின் மத்தியகளவீரரான ஜேம்ஸ் றொட்றிகாஸை ஒரு  பருவகாலத்துக்கு கடனடிப்படையில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான எவெர்ற்றன் ஒப்பந்தம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரெஞ்சு லீக் 1 கழகமான மொனாக்கோவிலிருந்து கடந்த 2014ஆம் ஆண்டு றியல் மட்ரிட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்ட 29 வயதான ஜேம்ஸ் றொட்றிகாஸ், இதுவரையில் 85 போட்டிகளில் விளையாடி 29 கோல்களைப் பெற்றிருந்தார்.

றியல் மட்ரிட்டின் முகாமையாளராக ஸினடி ஸிடேன் பதவியேற்ற பின்னர் றியல் மட்ரிட்டில் முன்னுரிமை வரிசையில் பின்தங்கியிருந்த ஜேம்ஸ் றொட்றிகாஸ், 2017ஆம் ஆண்டு தொடக்கம் கடந்தாண்டு வரையிலான இரண்டு பருவகாலங்களுக்கு ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சுக்கு கடனடிப்படையில் வழங்கப்பட்டிருந்தார்.

பயேர்ண் மியூனிச்சுக்காக 43 போட்டிகளில் விளையாடி 14 கோல்களை ஜேம்ஸ் றொட்றிகாஸ் பெற்றிருந்தார்.

எவெர்ற்றனில் தற்போது பயிற்சியாளராகவிருக்கும் கார்லோ அன்சிலோட்டியின் கீழ் றியல் மட்ரிட்டிலும், பயேர்ண் மியூனிச்சிலும் ஜேம்ஸ் றொட்றிகாஸ் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--