2020 ஒக்டோபர் 02, வெள்ளிக்கிழமை

எவெர்ற்றனை வென்றது டொட்டென்ஹாம்

Editorial   / 2020 ஜூலை 07 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற எவெற்றனுடனான போட்டியில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றிருந்தது.

இப்போட்டியின் 24ஆவது நிமிடத்தில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் முன்களவீரரான ஜியோவனி லோ செல்ஸோ கோல் கம்பத்தை நோக்கி உதைந்த பந்தானது எவெர்ற்றனின் பின்களவீரர் மிச்செல் கீனில் பட்டு ஓவ்ண் கோலானதோடு இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றிருந்தது.

இந்நிலையில், இப்போட்டியின் முதற்பாதி முடிவடைந்து வீரர்கள் அவர்களின் அறைக்குச் சென்றபோது ஓடிச் சென்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் அணித்தலைவரும் கோல் காப்பாளருமான ஹியூகோ லோரிஸ், சக முன்களவீரரான சண் ஹெயுங் மின்னுடன் மோதியிருந்தார். அந்தவகையில், சண் ஹெயுங் மின் பதிலளிக்க முற்பட்ட நிலையில் அவரையும் ஹியூகோ லோரிஸையும் சக வீரர்கள் விலத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .