2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறிய வட கொரியா

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 06 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொவிட்-19 தொடர்பான பிரச்சினைகள் காரணமாக, ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இவ்வாண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் வடகொரியா கலந்து கொள்ளாதென, அந்நாட்டு விளையாட்டமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

அந்தவகையில், பனிப்போருக்கு மத்தியில் 1988ஆம் ஆண்டு தென்கொரியத் தலைநகர் சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக்கை புறக்கணித்த பின்னர் முதற்தடவையாக ஒலிம்பிக்கை வடகொரியா தவற விடுகின்றது.

தமது ஒலிம்பிக் செயற்குழுவுக்கும், விளையாட்டமைச்சர் கிம் இல் குக்குமிடையே கடந்த மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பொன்றிலேயே குறித்த முடிவை எடுத்ததாக, தமது இணையத்தளத்தில் விளையாட்டமைச்சு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X