2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

செப். 19-இல் ஆரம்பிக்கிறது ஐ.பி.எல்

Editorial   / 2020 ஜூலை 24 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) இவ்வாண்டுக்கான பருவகாலமானது ஐக்கிய அரபு அமீரகத்தில் இவ்வாண்டு செப்டெம்பர் 19ஆம் திகதி தொடக்கம் இவ்வாண்டு நவம்பர் 10ஆம் திகதிக்கிடையில் நடைபெறவுள்ளது.

இறுதிப் போட்டியானது இவ்வாண்டு நவம்பர் மாதம் எட்டாம் திகதி அல்லது 10ஆம் திகதி நடைபெறலாம் என ஐ.பி.எல்லின் தலைவர் பிறிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ள நிலையில், குறிப்பிட்ட திகதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

எவ்வாறெனினும், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல்லை நடத்துவதற்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அனுமதியைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அனுமதி கிடைக்கும் எனவும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபு தாபி, டுபாய், ஷார்ஜா ஆகியவை தொடருக்கான பிரதான இடங்கள் என இவ்வார ஆரம்பத்தில் பிறிஜேஷ் பட்டே தெரிவித்திருந்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பயணப்படுவர்கள், பயணமாவதற்கு முன்னர் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், தரையிறங்கிய பின்னரும் கொவிட்-19 பரிசோதனை மேற்கொண்டு இரண்டிலும் தொற்றில்லாவிட்டால் தனிமைப்படுத்தல் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல்லானது 60 போட்டிகளைக் கொண்டிருக்கின்ற நிலையில் ஒரே நாளில் இரண்டு போட்டிகள் குறைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .