2020 ஜூன் 06, சனிக்கிழமை

டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கின்றது

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ராஜ்கோட்டில் நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது டெஸ்டுடன் ஆரம்பிக்கின்றது.

தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக, சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இந்தியா காணப்படுவதோடு, எட்டாமிடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் காணப்படுகின்ற நிலையில், இத்தொடரின் எந்த முடிவும் இரண்டு அணிகளுன் தரவரிசையில் எதுவித தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், குறித்த தொடரான தமது ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களை இறுதி செய்வதற்கான வாய்ப்பொன்றை இந்தியாவுக்கு வழங்குகின்றது. இத்தொடருக்கான குழாமில் ஷீகர் தவான், முரளி விஜய் ஆகியோர் இல்லாத நிலையில் குழாமில் இடம்பெற்றுள்ள பிறித்திவி ஷா, மாயங் அகர்வால், லோகேஷ் ராகுல் ஆகியோர் தமது இடங்களை உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பை இத்தொடர் வழங்குகின்றது.

இந்நிலையில், வழமைக்கு மாறாக குறித்த டெஸ்டுக்கான 12 பேர் கொண்ட அணியை இந்தியா இன்றே அறிவித்துள்ள நிலையில், அதில் பிறித்திவி ஷாவே இடம்பெற்றுள்ள நிலையில் தனது வாய்ப்புக்கு மாயங்க் அகர்வால் இன்னும் காத்திருக்க வேண்டியுள்ளது.

குறித்த அணியின் மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ்வும் வேகப்பந்துவீச்சாளராக ஷர்துல் தாக்கூரும் இடம்பெற்றுள்ள நிலையில், பெரும்பாலும் குல்தீப் யாதவ்வே அணியில் இடம்பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கமாக, தமது மண்ணில் அண்மைய காலமாக டெஸ்ட் போட்டிகளில் குறிப்பிடத்தக்களவான சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்தி வருகின்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு, அந்நிய மண்ணில் அதைத் தொடருவதற்கான முதலாவது வாய்ப்பாக இது அமைக்கின்றது.

அந்தவகையில், அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர், ஷனொன் கப்ரியல் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்களுடன் தேவேந்திர பிஷூ, றொஸ்டன் சேஸ் உள்ளிட்ட சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயற்பட்டால் இந்திய அணிக்கு மேற்கிந்தியத் தீவுகள் சவாலை வழங்கலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X