2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

தோற்றது பயேர்ண் மியூனிச்

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெலிஸ்கா தொடரில், பொரூசியா மொச்சென்கிளெட்பாவின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் தோற்றது.

பயேர்ண் மியூனிச் சார்பாகப் பெறப்பட்ட கோலை இவான் பெரிசிச் பெற்றிருந்தார். பொரூசியா மொச்சென்கிளெட்பா சார்பாகப் பெறப்பட்ட கோல்களை றமி பென்செபைனி பெற்றிருந்தார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற பொர்டுனாவுடனான போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் பொரூசியா டொட்டமுண்ட் வென்றிருந்தது. பொரூசியா டொட்டமுண்ட் சார்பாக, மார்கோ றொய்ஸ், ஜடோன் சஞ்சோ ஆகியோர் தலா இரண்டு கோல்களையும், தொர்கன் ஹஸார்ட் ஒரு கோலையும் பெற்றிருந்தனர்.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற ஹொஃபென்ஹெய்முடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஆர்.பி லெய்ஸிக் வென்றிருந்தது. ஆர்.பி லெய்ப்ஸிக் சார்பாக, திமோ வேணர் இரண்டு கோல்களையும், மார்செல் சபிட்ஸர் ஒரு கோலையும் பெற்றனர். ஹொபென்ஹெய்ம் சார்பாகப் பெறப்பட்ட கோலை எர்மின் பிகாசிச் பெற்றிருந்தார்.

அந்தவகையில், இப்போட்டிகளின் முடிவில் 31 புள்ளிகளுடன் புண்டெலிஸ்கா புள்ளிகள் பட்டியலில் முதலாமிடத்தில் பொரூசியா மொச்சென்கிளெட்பா காணப்படுகிறது. 30 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் ஆர்.பி லெய்ப்ஸிக்கும், 26 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் பொரூசியா டொட்டமுண்டும், 25 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் ஷல்கேயும் காணப்படுகின்றன. 24 புள்ளிகளுடன் ஏழாமிடத்தில் பயேர்ண் மியூனிச் காணப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--