2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்தியா - சிம்பாப்வே அணிகள் மீண்டும் மோதுகின்றன.

Super User   / 2010 ஜூன் 03 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் சிம்பாப்வே அணிகள் மீண்டும் மோதுகின்றன. இந்தத் தொடரில் ஏற்கனவே சிம்பாப்வேயிடம் சந்தித்த தோல்விக்கு, இம்முறை ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி பழிதீர்க்க காத்திருக்கிறது.

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் சிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றது. இதன் முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, இலங்கை, சிம்பாப்வே அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

அத்துடன், ஒரு போனஸ் புள்ளி பெற்ற இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று துவங்கும் இரண்டாவது சுற்று லீக் போட்டியில் இந்திய அணி, சிம்பாப்வேயை எதிர்க்கொள்கிறமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--