2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

வீரர்களுக்கு நிகராக வீராங்கனைகளுக்கு ஊதியம்

Editorial   / 2019 நவம்பர் 06 , பி.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய தேசிய அணிக்காக விளையாடும் கால்பந்தாட்ட வீராங்கனைகள், இன்று வெளிப்படுத்தப்பட்ட ஒப்பந்தமொன்றின் கீழ் வீரர்களுக்கு நிகரான ஊதியத்தைப் பெறவுள்ளனர்.

இதேவேளை, அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட சம்மேளனத்தால் அறிவிக்கப்பட்ட புதிய மய்யப்படுத்தப்பட்ட ஒப்பந்த அமைப்பொன்றின் கீழ் சாம் கெர், எலி கார்பென்டர் போன்ற நட்சத்திர வீராங்கனைகள், ஆரோன் மூய், மற் றயன் போன்ற வீரர்களுக்கு சமமான ஊதியத்தைப் பெறவுள்ளனர்.

இதேவேளை, வீரர்களைப் போல வீராங்கனைகளுக்கும் சர்வதேசப் போட்டிகள், தொடர்களுக்கு வர்த்தக வகுப்பு விமானச்சேவைகள் வழங்கப்படவுள்ளன.

அந்தவகையில், ஐக்கிய அமெரிக்க கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கெதிராக, வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்குமான சம ஊதியத்துக்காக வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ள ஐக்கிய அமெரிக்க கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு மேற்குறித்த நகர்வானது உந்துசக்தியாக அமையவுள்ளது. இவ்வழக்கானது அடுத்தாண்டு மே மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

கிரான்ட் ஸ்லாம் தொடர்களில் வீராங்கனைகளுக்கு வீரர்களின் சம ஊதியத்தை அறிமுகப்படுத்தி குறித்த விடயத்தில் முன்னிலையில் டென்னிஸ் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .