2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

ஸ்டீவ் ஸ்மித்தை வெளியேற்றும் ராஜஸ்தான்?

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 11 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) ராஜஸ்தான் றோயல்ஸ், தமதணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை இவ்வாண்டு ஏலத்துக்கு முன்னதாக வெளியேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தக்கவைக்கும் வீரர்களை எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் அணிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலையில் விரைவில் தக்க வைக்கவுள்ள வீரர்களை சமர்ப்பிக்கவுள்ள ராஜஸ்தான், இறுதி முடிவை விரைவாக எடுக்கவுள்ளது.

கடந்த பருவகாலத்தில் குறிப்பிடத்தக்கதான பெறுபேறுகளை ஸ்மித் பெறாததன் காரணமாகவே அவரை ராஜஸ்தான் வெளியேற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .