2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

டோனியின் தேனிலவு இலங்கையில்

Super User   / 2010 ஜூலை 09 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


புதிதாக திருமணம் முடித்த இந்திய  கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேந்திரசிங் டோனியும் அவரின் மனைவி சாக்ஷியும் இன்று இலங்கைக்கு வருகின்றனர்.

அவர்கள் தேனிலவுக்காக நியூஸிலாந்துக்குச் செல்லவுள்ளதாக முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. எனினும் 18 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ள இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடருக்காக டோனி இலங்கை வரும்போது அவரின் மனைவியும் இலங்கைக்கு வருவார் என டோனிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி இன்று இலங்கைக்கு வருகிறது. இச்சுற்றுலாவின் முடிவில் இந்திய அணி தாயகம் திரும்பியவுடன் விமர்சையான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியொன்று மும்பையில்  நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விளையாட்டு நட்சத்திரங்கள், பொலிவூட் நட்சத்திரங்கள் மற்றும் வர்த்தகப்புள்ளிகள் பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0

 • Zaman Saturday, 10 July 2010 03:57 PM

  வாழ்த்துக்கள் மஹேந்திரசிங் டோனி ................. கவனம்: இலங்கை வந்தால் நீங்களும் தடைக்குள்ளவீர் .....

  Reply : 0       0

  Zaman Saturday, 10 July 2010 03:57 PM

  வாழ்த்துக்கள் மஹேந்திரசிங் டோனி ................. கவனம் : இலங்கை வந்தால் நீங்களும் தடைக்குள்ளாவீர் .....

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--