Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 05 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் எதிர்ப்புப் பிரிவு, கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியிலிருந்து இலங்கை அணி வீரர் ஒருவரின் நடவடிக்கை தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருகிறது.
சட்டவிரோத சூதாட்ட முகவர் என சந்தேகிக்கப்படும் ஒருவருடன் இரவு நேரத்தில் அதிகம் பழகிவந்ததையிட்டு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரிலேயே குறித்த வீரர் கண்காணிக்கப்படுவதாக தி கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் கிரிக்கெட் சபையின் ஊழலுக்கெதிரான பிரிவினால் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குமார சங்கக்காரவிடம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி வீரர் குறித்து இலங்கை பொலிஸார் விசாரணை நடத்தினர். குறித்த வீரர் மீது குற்றம் சுமத்தப்படவில்லை. எனினும், இவ்விசாரணையின் முன்னேற்றமின்மை குறித்து ஊழலுக்கெதிரான பிரிவு அதிருப்தி வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, ஐ.சி.சியின் பிரதம நிறைவேற்றதிகாரி ஹாருன் லோகார்ட் இவ்விடயத்தில் தனது பொதுவான ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். "ஊழல் எதிர்ப்புப் பிரிவின் செயற்பாடு பொலிஸை போன்றதோ அல்லது பத்திரிகைகளைப் போன்றதோ அல்ல. முற்றுகைகளையோ கைதுகளையோ மேற்கொள்வதற்கு எமக்கு அதிகாரம் எதுவுமில்லை" என அவர் கூறியுள்ளார்.
34 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
4 hours ago