Super User / 2011 ஏப்ரல் 06 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்து சுற்றுலாவுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுநராக பணியாற்றுமாறு அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் லோ கோரப்பட்டுள்ளார்.
இதுவரை இலங்கை அணியின் பயிற்றுநராக அவுஸ்திரேலியாவின் ட்ரவோர் பெய்லிஸ் பணியாற்றினார். அவரின் கீழ் 2009 நவம்பர் முதல் உதவிப் பயிற்றுநராக ஸ்டுவர்ட் லோ பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. பெய்லீஸின் பின்னர் முழுநேர பயிற்றுநராக ஸ்டுவர்ட் லோ பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 4 வருடங்களாக அணியின் பயிற்றுநராக கடமையாற்றிய ட்ரவோர் பெய்லீஸ் உலகக்கிண்ணப் போட்டிகளுடன் பயிற்றுநர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் "இடைக்கால பயிற்றுநராக பணியாற்றுமாறு நாம் ஸ்டுவர்ட் லோவிடம் கோரியுள்ளோம்" என ஸ்ரீலங்கா கிரிக்கெட் செயலாளர் நிஷாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த இரு நாட்களில் இலங்கை அணியின் தலைவர் குமார் சங்கக்கார, உபதலைவர் மஹேல ஜயவர்தன ஆகியோர் ராஜினாமா செய்தனர். தேர்வுக்குழுவினரும் இன்று ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Oct 2025