2021 மார்ச் 08, திங்கட்கிழமை

அழுத்தங்கள் இல்லை: டேவிட் வோணர்

A.P.Mathan   / 2012 நவம்பர் 15 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைக்காலமாக பெருமளவு ஓட்டங்களைக் குவித்திருக்காத போதிலும் தான் அழுத்தங்களுக்குள்ளாகியிருக்கவில்லை என அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர் தெரிவித்துள்ளார். அத்தோடு மிக விரைவில் தன்னால் சிறப்பாக ஆட முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் டேவிட் வோணர் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்த போதிலும் சக ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான எட் கொவான், 6ஆம் இலக்கத் துடுப்பாட்ட வீரர் மைக்கல் ஹசி ஆகியோர் சதங்களையும், 5ஆம் இலக்கத் துடுப்பாட்ட வீரரான மைக்கல் கிளார்க் 250 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள டேவிட் வோணர், இரண்டாவது போட்டிக்குச் செல்வதற்கு முன்னர் தான் அழுதத்தங்களெவற்றையும் எதிர்கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். அத்தோடு போட்டிகளைத் தொடர்ந்து வெல்லும் வரை, உலகின் முதல்நிலை அணிக்கான பயணம் சிறப்பாகத் தொடரும் வரை அவையே முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்.

தான் சிறப்பாக உணர்வதாகத் தெரிவித்த டேவிட் வோணர், தான் புத்துணர்வுடன் காணப்படுவதாகவும், மீண்டும் சிறப்பாகச் செயற்படத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முதலாவது போட்டியில் சக வீரர்கள் ஓட்டங்களைக் குவிக்கும் போது அவற்றை மைதானத்திற்கு வெளியேயிருந்து பார்த்துக் கொண்டிருந்ததாகவும், தற்போது தனது வாய்ப்புக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.

இரண்டாவது போட்டிக்கு முன்னதாக மீண்டும் சிறப்பாகத் தயாராவதாகத் தெரிவித்த அவர், தன்னால் முடிந்தளவு மிகச்சிறப்பாகத் தயாராவதாகத் தெரிவதாகத் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .